சீனக் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் 26ஆம் நாள் வெளியிட்ட 2026ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் உள்நாட்டு மக்களின் பயணம் குறித்த தரவுகளின்படி, இக்காலக்கட்டத்தில் உள்நாட்டு மக்களின் பயண எண்ணிக்கை 530 கோடியே 70 லட்சத்தை எட்டியது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 30 கோடியே 90 லட்சம் அதிகரித்துள்ளதோடு, 6.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், நகர்ப்புற மக்களின் பயணங்கள் மற்றும் கிராமப்புற மக்களின் பயணங்கள் முறையே 403 கோடியே 7 லட்சம் மற்றும் 127 கோடியாக உள்ளன. இவை முந்தைய ஆண்டை விட முறையே 6.6 சதவீதம் மற்றும் 5.1 சதவீதம் அதிகமாகும்.
பயணச் செலவுகள் குறித்து, முதல் மூன்று காலாண்டுகளில் உள்நாட்டு மக்களின் பயணங்களுக்கான மொத்தச் செலவு 4.95 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 0.11 லட்சம் கோடி யுவானும் 2.2 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதில், நகர்ப்புற மக்களின் பயணச் செலவு 4.14 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராமப்புற மக்களின் பயணச் செலவு 0.81 லட்சம் கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டை விட 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
