‘மாமன்’ பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி  

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தனது கடின உழைப்பால் ஹீரோவாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி.
இவர் ஹீரோவாக நடித்த விடுதலை, கருடன் உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘மாமன்’ படம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதையை சூரியே எழுதிய நிலையில், ப்ரசாத் பாண்டியராஜன் இயக்கியுள்ளார்.
இன்று இந்த படம் வெளியான நிலையில் படத்தின் வெற்றிக்காக சூரி ரசிகர்கள் சிலர் கோவிலில் வேண்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டுள்ளனர்.

இந்த விஷயம் சூரிக்கு தெரிய வர அவர் மிகவும் கோபமாக பேசியுள்ளார்.
மாமன் படத்தின் வெற்றியை காண திரையரங்கிற்கு வந்தவரிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டபோது அவர் இதைக்கூறினார்.

You May Also Like

More From Author