20ஆவது மேற்கு சீனச் சர்வதேசப் பொருட்காட்சிக்கு சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் மே 25ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.
வாழ்த்து செய்தியில் அவர் கூறுகையில், நடப்புப் பொருட்காட்சியில் உயர்நிலை வெளிநாட்டு திறப்பை விரிவாக்குதல், பிராந்திய பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குதல், நவீன தொழில்துறை அமைப்பின் கட்டுமானத்தை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது. உலகின் பல்வேறு நாடுகள் சீனாவின் மேற்குப் பகுதியின் வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ள இது பயனுள்ள தளத்தை வழங்குகின்றது என்று தெரிவித்தார்.
20ஆவது மேற்குச் சீனச் சர்வதேசப் பொருட்காட்சி மே 25ஆம் நாள் முற்பகல் சிச்சுவான் மாநிலத்தின் செங்து நகரில் துவங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்தப் பொருட்காட்சியில், 62 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், உள்நாட்டின் 27 மாநிலங்கள், பிரதேசங்கள் மற்றும் நகரங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன.
மேற்குப் பகுதியின் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு, மேற்குப் பகுதியில் உள்ள தொழில்களின் புதிய வளர்ச்சி, மேற்குப் பகுதியின் இனிமையான வாழ்க்கை ஆகிய மூன்று அம்சக் காட்சியிடங்களின் கீழ், 15 தலைப்புகளில் உருவாக்கப்பட்ட கண்காட்சி அரங்குகள் மொத்தம் 2இலட்சம் சதூரமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மேற்குச் சீனாவின் பல்வேறு இடங்களில் மிக புதிய அறிவியல் தொழில் நுட்ப சாதனைகளும் தனிச்சிறப்புடைய தொழில்களின் நிலவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மேலும், இப்பொருட்காட்சியில் பங்கெடுத்த தொழில் நிறுவனங்களில், உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் எண்ணிக்கை 61ஆகும். இது, கடந்த ஆண்டை விட 74.3விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.