இவ்வாண்டின் துவக்கம் முதல், சர்வதேச பொருளாதார வர்த்தக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள அபாயங்கள் மற்றும் அறைகூவல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் சீனாவின் அந்நிய வர்த்தகம், சீராக வளர்ந்து வரும் போக்கை நிலைநிறுத்தியுள்ளது. இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் சீனாவின் அந்நிய வர்த்தகம் 3.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஹே யுங்சியன் ஆகஸ்ட் 21ஆம் நாள் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில், புதிதாக வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் இதர நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதில் ஆசியான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி தொகை முறையே 9.4 விழுக்காடு மற்றும் 17.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.
தவிர, இந்த காலத்தில் சீனாவின் இயந்திர மின் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அளவு 9.3 விழுக்காடு அதிகரித்து, சீனாவின் மொத்த ஏற்றுமதியில் 60 விழுக்காடாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1.1 சதவீத புள்ளிகள் அதிகமாகும். நுண்ணறிவு வீட்டு பொருட்கள், மின்னாற்றல் வாகனங்கள், தொழிற்துறை ரோபோட், கப்பல்கள் முதலிய உயர் தொழில் நுட்பம் மற்றும் உயர் இணைப்பு மதிப்பு வாய்ந்த பொருட்களின் ஏற்றுமதியின் அதிகரிப்பு விகிதம் உயர்ந்த நிலையில் உள்ளது என்றார்.
