சீனாவின் கிரெடிட் ரேட்டிங்க ‘A1’ தரத்தில் உள்ளதாகவும், கண்ணோட்டம் எதிர்மறையாக உள்ள நிலையில் மாற்றாமல் பராமரிக்கவும் முடிவு செய்துள்ளதாக சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் மே 26ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது குறித்து சீன நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டிலிருந்து சீன அரசு ஒட்டுமொத்த பொருளாதார கட்டுபாட்டு கொள்கைகள் மூலம், பொருளாதார குறியீடுகள் மேம்படுத்தப்பட்டு, சந்தை மீதான எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை நிலையாக இருந்து, கடனின் நடுத்தர மற்றும் நீண்ட கால நிலைத்தன்மை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சீனாவின் கிரெடிட் ரேட்டிங்கை பராமரிக்க மூடிஸ் நிறுவனம் முடிவு செய்தது, சீனப் பொருளாதாரம் நல்ல திசையை நோக்கி வளர்ப்பதற்கான நேர்மறையான பிரதிபலிப்பு ஆகும் என்று தெரிவித்தார்.