உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் சீனா

உலக வர்த்தக அமைப்பின் சிறு அளவு அமைச்சர் நிலை கூட்டம் ஸ்விட்சர்லாந்தின் டவோஸில் ஜனவரி 22ஆம் நாள் நடைபெற்றது. சீன வணிக அமைச்சகத்தின் சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தை பிரதிநிதியும் துணை அமைச்சருமான லி சேங்காங் இதில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.

உலக வர்த்தக அமைப்பின் அடிப்படை கோட்பாடு மற்றும் விதிமுறை உலக வர்த்தக வளர்ச்சிக்கு நிலைத்தன்மையை வழங்குகிறது. தற்போது சர்வதேச வர்த்தகம் பதற்றமாக இருக்கும் நிலையில், இவ்வமைப்பின் மதிப்பு மேலும் தெளிவாக உள்ளது. அதன் உறுப்பினர்கள் நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, சீர்திருத்தத்தின் மூலம் பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையின் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பலதரப்பு வர்த்தக அமைப்புமுறையில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்று அதனை உறுதியுடன் பேணிக்காக்கும் சீனா, உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, சீர்திருத்த பயன்களை அனைத்து உறுப்பினர்களும் பெறச் செய்வதற்கு பங்காற்றும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author