மாநிலங்களவைத் தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Estimated read time 0 min read

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வழக்கறிஞர் வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர் சல்மா, எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. தி.மு.க. வேட்பாளர்களாக திரு. பி.வில்சன் பி.எஸ்சி., பி.எல்., திரு. எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author