யுனேஸ்கோவிலிருந்து அமெரிக்கா 3வது முறையாக விலகியது. இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் நடத்திய உலகளாவிய கருத்துக் கணிப்பில், 84.2 விழுக்காட்டினர் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அமெரிக்காவின் விலகலை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளது ஆச்சரியம் ஒன்றும் இல்லை என இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிவினை தன்மையுடைய சமூக மற்றும் பண்பாட்டு லட்சியத்தை யுனேஸ்கோ முன்னேற்றுவது, அமெரிக்கா முதன்மை என்ற கொள்கைக்குப் பொருந்தியதாக இல்லை என்பது, அமெரிக்காவின் சாக்குபோக்காகும். இது குறித்து, 91.1 விழுக்காட்டினர் கூறுகையில், சர்வதேச அமைப்புகளின் மீதான அமெரிக்காவின் மனப்பாங்கு, பெரிய நாடு என்ற தனது தகுநிலைக்கு ஏற்றதாக இல்லை என்றும், சமூகத்தின் கூட்டு நலன்களுக்கும் துணைப் புரியவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும், அமெரிக்காவின் செயல்கள், தனது சர்வதேச நன்பகத்தன்மை மற்றும் செல்வாக்கை பெரிது குறைத்துள்ளதாக 88.1 விழுக்காட்டினர் தெரிவித்தனர். தவிரவும், சர்வதேச சமூகம் கையோடு கை கோர்த்து, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, மேலும் நேர்மையான மற்றும் நியாயமான புதிய சர்வதேச ஒழுங்கின் உருவாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்று 92.8 விழுக்காட்டினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தக் கருத்துக் கணிப்பு ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரெஞ்சு, அரபு, ரஷியா உள்ளிட்ட 5 மொழிகளில் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 9097 பேர் இதில் பங்கேற்றனர்.