இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய கட்டாய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் இருக்கைகளுக்கு அதிக தேவை உள்ள காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான இரு மணி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய, ஆதார் அங்கீகாரம் (Aadhaar authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதி அக்டோபர் 28 அன்று அமலுக்கு வந்துள்ளது.
இதன் முக்கிய நோக்கம், பல கணக்குகள் அல்லது ஆட்டோமேட்டட் மென்பொருள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுத்து, உண்மையான பயணிகளுக்கு எளிதாகவும் நியாயமான விலையிலும் டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதே ஆகும்.
காலை 8-10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்
