தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸின் சூழ்ச்சிக்குப் பயன் இல்லை

தென் சீன கடல் அமைதிக்குத் துணை புரியும் மேலதிகமான உடன்படிக்கைகளில் சீனாவுடன் கையொப்பமிட்ட பிலிப்பைன்ஸ் கருத்தில் கொள்கின்றது என்று பிலிப்பைன்ஸின் அதிகாரி ஒருவர் அண்மையில், 46ஆவது ஆசியான் உச்சிமாநாட்டின் போது தெரிவித்தார்.

அதேவேளையில், ஆக்கிரமூட்டும் பிலிப்பைன்ஸின் நடத்தை தொடருகிறது. அமெரிக்காவுடன் 6ஆவது பல தரப்பு கடலில் கூட்டு இராணுவ பயிற்சியை நடத்தி, சீனாவின் நான்ஷா தீவுகள் பகுதியை ஊடுருவியது. பிலிப்பைன்ஸின் நடைமுறை செயல்கள், அமைதிக்குப் புறம்பானது. ஆசியானின் வேறு நாடுகளிடமிருந்து பிலிப்பைன்ஸ் நம்பிக்கையை பெற கடினமானது.

அந்நாட்டின் இடைகாலத் தேர்தலின்படி, நடப்பு அரசு புதிய பிலிப்பைன்ஸ் கூட்டணியில் 6 இடங்களையே மட்டுமே பெற்று, திட்டமிட்ட நோக்கத்தை விட குறைவாக பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி, அந்நாட்டின் பொது மக்கள் சொந்த வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். தென் சீன கடல் நிலைமையை நிதானப்படுத்தி, சீன-பிலிப்பைன்ஸ் உறவு சீராக வளர்ந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் மக்களும் விரும்புகின்றனர்.

You May Also Like

More From Author