2023ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு விரைவில் துவங்கவுள்ளது. இதை முன்னிட்டு, இம்மாநாட்டைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கு ஜூலை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
செயற்கை நுண்ணறிவு துறையைச் சேர்ந்த 10க்கும் மேலான தலைச்சிறந்த நிபுணர்கள் மற்றும் அறிஞர்களும், நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தற்போதைய மிகப் பிரபலமான செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் வளர்ச்சி மற்றும் ஆய்வு பற்றி இக்கருத்தரங்கில் விவாதம் நடத்தினர்.
மேலும், பொய்ஜிங் மாநகரில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் தரமிக்க தரவுகளின் முதலாவது தொகுதி வெளியிடப்பட்டது. பொருளாதாரம், அரசியல், பண்பாடு, சமூகம், சூழலியல் உள்ளிட்ட துறைகளின் தரவுகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
தற்போது, சீனாவின் புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு புத்தாக்க வளர்ச்சிக்கான சோதனை மண்டலம் மற்றும் தேசிய செயற்கை நுண்ணறிவு புத்தாக்கப் பயன்பாட்டு முன்மாதிரி மண்டலத்தின் கட்டுமானம் பெய்ஜிங்கில் முன்னேற்றப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.