தென்கொரியாவில் சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தகக் கலந்தாய்வு

சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக விவகாரத்துக்கான சீன தரப்பின் தலைவரும், சீன அரசவையின் துணை தலைமை அமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்க தரப்பின் தலைவரும் அமெரிக்க நிதித்துறை அமைச்சருமான பெசன்ட் ஆகியோர் மே 13ம் நாள் தென்கொரியாவில் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துகளின் தலைமையில், ஒன்றுக்கொன்று மதிப்பளித்தல், சமாதான சக வாழ்வு மற்றும் ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது ஆகிய கோட்பாடுகளைப் பின்பற்றி, தத்தமது அக்கறை கொண்ட பொருளாதார வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்ப்பது, பயன் தரும் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது ஆகியவை குறித்து இரு தரப்பும்,மனம் திறந்து ஆக்கபூர்வமான மற்றும் ஆழ்ந்த பரிமாற்றம் செய்துள்ளன.

 

You May Also Like

More From Author