உலகச் சுகாதார அமைப்பின் 78ஆவது மாநாடு 27ஆம் நாள், ஜெனீவாவில் நிறைவடைந்தது. பெருந்தொற்றுக்கான உலகச் சுகாதார அமைப்பின் உடன்படிக்கை இதில் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. அடுத்த நிதி ஆண்டின் 420 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வரவு செலவுத் திட்டமும் இதில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.i
இந்த உடன்படிக்கையி மூலம், உலகளவில் ஒத்துழைப்புகளை விரைவுபடுத்தி, பெருந்தொற்று நிலைமையை மேலும் வலிமையாகவும், நியாயமாகவும் தடுக்கும் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்தது.not
தாய் சேய் ஊட்டச் சத்து மேம்பாடு, நுண்ணுயிர் கொல்லிகளை எதிர்க்கும் திறன் மேம்பாட்டுக்கான உலகளாவிய செயல் திட்டம் உள்ளிட்ட பல தீர்மானங்களும் முடிவுகளும் இம்மாநாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.