சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், 2வது சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க, கசகஸ்தானின் அஸ்தானாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு, 2025ஆம் ஆண்டு சீன ஊடகக் குழுமத்தின் சிறந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிகழ்ச்சிகளின் ஒளிப்பரப்பு நிகழ்வு அண்மையில் அஸ்தானாவில் துவங்கியது.
பண்பாடு பற்றிய ஷி ச்சின்பிங்கின் புரிந்துணர்வு உள்ளிட்ட 12 சிறந்த நிகழ்ச்சிகள், கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் முக்கிய ஊடகங்களில் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணைத் தலைவரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் கூறுகையில், இந்த சிறந்த நிகழ்ச்சிகளின் ஒளிப்பரப்பின் மூலம், பரந்துபட்ட மத்திய ஆசிய ரசிகர்கள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் ஈர்ப்பு ஆற்றலையும், சீன மக்களின் அன்பையும் உணர்ந்து கொண்டுள்ளதோடு, புதிய யுகத்தில் சீனாவின் உயிராற்றலை அறிந்து கொண்டு, பரஸ்பர நலன் தரும் கூட்டு வெற்றி பெறும் ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.