சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாள், தென் கொரியாவின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள லீ ஜே மியூங்கிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் சீனாவும் தென் கொரியாவும் முக்கிய அண்டை நாடுகளாகவும் ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய ஷிச்சின்பிங், இரு தரப்புறவு நிறுவப்பட்ட 33 ஆண்டுகளில், இரு தரப்பும் கையோடு கை கோர்த்து ஒன்றுக்கு ஒன்று சாதனைகளைக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாட்டுறவின் சீரான, நிதானமான வளர்ச்சியை நனவாக்கி, இரு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில், பிரதேசத்தின் அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமைக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றவும் ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.