கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும்; தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்  

Estimated read time 0 min read

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மையமாகக் கொண்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நிலவரப்படி, இந்தியாவில் 5,364 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரம் 4,724 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளா 1,679 பாதிப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் (615), மேற்கு வங்கம் (596), டெல்லி (562), மற்றும் மகாராஷ்டிரா (548) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 221 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.

You May Also Like

More From Author