விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடித்துள்ள ஆக்ஷன்-த்ரில்லர் திரைப்படமான ‘மகாராஜா’, பாக்ஸ் ஆபிஸில் வலுவான வசூலை செய்துள்ளது.
நேற்று அறிமுகமான இப்படம் ஒரே நாளில் 4.50 கோடி ரூபாய் வசூலித்தது.
2024 ஆம் ஆண்டில் மூன்றே மூன்று தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமே இப்படி ஒரு பிரமாண்டம் ஆரம்பம் கிடைத்திருக்கிறது.
இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மம்தா மோகன்தாஸ் மற்றும் அபிராமி ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
நித்திலன் சாமிநாதன் இயக்கிய, மகாராஜா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது.
விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ ஒரே நாளில் ரூ.4.50 கோடி வசூல்
