அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து 2026 (FIFA World Cup) தொடரின் குரூப் ‘ஜே’ முதல் லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி அதிரடி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கணக்குகளையும் தவிடுபொடியாக்கும் வகையில், அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தனது 200-வது சர்வதேசப் போட்டியில் அபாரமாக விளையாடி ஹாட்ரிக் கோல் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து 2026: 200-வது சர்வதேச போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் சாதனை
