தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் கீழயபிள்ளையூர். சுமார் 300 குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், மற்ற ஊர்களைப் போலப் பொங்கல் கொண்டாட்டங்கள் இருப்பதில்லை.
தமிழ்நாடு முழுவதிலும் பொங்கல் வாசனை வீசும் போது, இந்தக் கிராமத்தில் மட்டும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்காக அடுப்புகள் பற்றவைக்கப்படுவதில்லை.
ஆறு தலைமுறைகளாகப் பொங்கல் பானை வைக்காத ஒரு விசித்திரமான, அதே சமயம் அழுத்தமான பாரம்பரியத்தை இந்த மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
கீழயபிள்ளையூர்: 100 ஆண்டுககும் மேலாக பொங்கலைக் கொண்டாடாத கிராமத்தின் உண்மை வரலாறு
