பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 134 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால் மாணவர்கள் போட்டிப் போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

You May Also Like

More From Author