பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் வியாழக்கிழமை பிற்பகுதியில் ஒரு ஏழு மாடி கட்டிடம் தீ விபத்துக்குள்ளாகியதால் குறைந்தது 43 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
“இதுவரை 43 பேர் தீயில் இறந்துள்ளனர்” என்று பங்களாதேஷின் சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தீக்காய மருத்துவமனையைப் பார்வையிட்ட பின்னர் தெரிவித்தார்.
காயமடைந்த 40 பேர் நகரின் பிரதான தீக்காய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சென்தெரிவித்துள்ளார்.
டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் வியாழக்கிழமை இரவு 9:50 மணிக்கு(1550 ஜிஎம்டி) தீ விபத்து ஏற்பட்டது என்று தீயணைப்புத் துறை அதிகாரி முகமது ஷிஹாப் கூறியுள்ளார்.