பல மாதங்களாக நீடித்து வரும் கடுமையான மோதல்கள், பரஸ்பர மிரட்டல்கள் மற்றும் தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஈரானுடன் ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்படும் தூரத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப்,”ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் ஒரு ‘மகா ஒப்பந்தத்தை’ மேற்கொண்டுள்ளோம்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், இந்த உடன்படிக்கை தொடர்பான இறுதி ஆவணப் பணிகள் மட்டுமே தற்போது மீதமுள்ளன என்றும், அடுத்த சில நாட்களில் அவை முழுமை பெற்று இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா-ஈரான் போர்? ட்ரம்ப் அறிவித்த ‘மகா ஒப்பந்தம்’
