தமிழக மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார்.
இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வினை எழுந்தினர், அதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஆண்டை விட தற்போது 150 மாணவர்களை கூடுதலாக சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அன்னை மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களும், கன்னியாகுமரியில் உள்ள மெடிக்கல் மிஷன் அண்ட் ரிசர்ச் செண்டர் கல்லூரியில் 100 மாணவர்களும் என மொத்தம் 150 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளது.” எனத்தெரிவித்தார்.