சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் புதிய முயற்சியாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாத இறுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த சேவை, ஜூன் 1 முதல் செயல்பாட்டில் உள்ளது.
பள்ளிக்கு செல்லும் வசதியின்றி, மாணவர்கள் தனியார் பள்ளிகளை தேட வேண்டிய நிலை ஏற்பட்டதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி கல்வித் துறை மணலி புதுநகர், வெட்டுவாங்கேனி, எழில்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மூன்று மாநகராட்சி பள்ளிகளுக்கு இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடக்கம்
