ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

Estimated read time 0 min read

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தடுக்க நினைத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்தது.

இந்த நிலையில், ஈரான் மீது சனிக்கிழமையன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கும் அமெரிக்காவுக்கும் சம்மந்தம் இல்லை என அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு வலிமையும் ஈரான் மீது செலுத்தப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

More From Author