சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், அண்மையில், சீனாவின் தணிக்கைப் பணி குறித்து முக்கிய கட்டளையிட்டார்.
அவர் கூறுகையில்,
சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசத்தின் கண்காணிப்பு அமைப்பு முறையின் முக்கிய பகுதி, தணிக்கைப் பணியாகும். புதிய யுகத்தில் சீனா தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாக கொண்டு, தணிக்கைப் பணிக்கான மூது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊன்றி நின்று, முக்கிய பணியில் கவனம் செலுத்தி, முக்கிய கடமையை ஏற்றுக்கொண்டு, சீர்திருத்தத்தையும் புத்தாக்கத்தையும் ஆழமாக்க வேண்டும்.
ஒன்றிணைப்பைக் கொண்டு, முழுமையாகப் பரவல் செய்து, பயனுள்ளதாக இயங்கும் தணிக்கை அமைப்பு முறையை உருவாக்க வேண்டும். வலிமையான தேசம் என்ற நெடுநோக்கு திட்டத்தையும் தேசிய மறுமலர்ச்சியையும் முன்னேற்றுவதற்குப் பங்காற்ற வேண்டும் என்றார்.