“ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்”நிகழ்ச்சி ஒளிப்பரப்பு

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கசகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறவுள்ள 2வது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்”நிகழ்ச்சியின் ஒளிப்பரப்பு, ஜுன் 16ம் நாள் கசகஸ்தானின் அரசுத் தலைவர் மையத்தில் துவங்கியது.  
இத்துவக்க விழாவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பிரச்சார அமைச்சகத்தின் துணை தலைவரும் சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹாய் ஷியொங் உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், மத்திய ஆசிய நாடுகளுடனான உறவில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில்  சீனாவின் பழங்கால புத்தகங்களில்  ஷிச்சின்பிங் காட்டிய  அதிசிறந்த மேற்கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சி, மேலும் நெருங்கிய சீன-மத்திய ஆசிய பொது எதிர்கால சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆழ்ந்த மற்றும் நீண்டகால எழுச்சி சக்தியை வழங்கும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author