2024ஆம் ஆண்டு சீனாவின் வேளாண் துறை மற்றும் தொடர்புடைய தொழில் துறைகளின் அதிகரிப்பு மதிப்பு
சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் டிசம்பர் 30ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு சீனாவின் வேளாண் துறை மற்றும் தொடர்புடைய தொழில் துறைகளின் அதிகரிப்பு மதிப்பு 20 லட்சத்து 61 ஆயிரத்து 730 கோடி யுவானை எட்டி, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 15.29 விழுக்காடை வகித்துள்ளது.
மேலும், வேளாண் துறை மற்றும் தொடர்புடைய தொழில் துறைகளில், வேளாண்மை, வனவியல், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் தொழில், இத்தொழிலில் உணவுப் பொருட்களின் பதனீடு மற்றும் தயாரிப்பு, இத்தொழிலுடன் தொடர்புடைய பொருட்களின் புழர்ரம் மற்றும் சேவை ஆகியவற்றின் அதிகரிப்பு மதிப்பு முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
இவை, வேளாண் துறை மற்றும் தொடர்புடைய தொழில் துறைகளின் அதிகரிப்பு மதிப்பில் முறையே 47, 19.3 மற்றும் 15.4 விழுக்காடை வகித்துள்ளன.
