சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 16ஆம் நாளில், ச்சுஷ் இதழில் முக்கிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டுத் திறப்புப் பணியை உயர் தரத்துடன் உறுதியாக முன்னேற்றுவது என்பது இக்கட்டுரையின் தலைப்பாகும்.
அவர் இக்கட்டுரையில் கூறுகையில்,
வெளிநாட்டுத் திறப்பின் மூலம் சீர்திருத்தத்தையும் வளர்ச்சியையும் விரைவுபடுத்தி வருவது, சீனாவின் வளர்ச்சி தொடர்ந்து சாதனைகளைப் பெறுவதற்கான திறவுகோளாகும். சீனச் சந்தை, உலகில் 2ஆவது பெரிய நுகர்வுச் சந்தையாகும். சீனாவில் இடைநிலை வருமானம் பெறுவோர் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக உள்ளது. இதில் மாபெரும் முதலீடு மற்றும் நுகர்வு உள்ளார்ந்த ஆற்றல் காணப்படும். உலகில் பொதுவாக கருதப்பட்டுள்ள மிகவும் பாதுகாப்பான நாடாகவும் சீனா விளங்குகிறது. சீனாவில் முதலீடு செய்வதால், எதிர்கால வாய்ப்புகளைப் பெற முடியும். உலகப் பொருளாதாரத்தின் மேலாண்மையில் கலந்துகொண்டு, வெளிநாட்டுத் திறப்பு வாய்ந்த உலகப் பொருளாதாரத்தை உருவாக்க சீனா பாடுபடும் என்றார்.