கார்த்திகை முதல் வெள்ளி: நிலை வாசலில் இந்த குறியீட்டை வரைந்தால் மகாலட்சுமி உங்கள் வீடு தேடி வருவாள்!

Estimated read time 0 min read

இன்று நம் கையில் இருந்து செல்லும் பணம், நாளை மீண்டும் நம் கைக்கு திரும்ப வேண்டும். இதுதான் மகாலட்சுமி வழிபாட்டில் மறைந்திருக்கும் சூட்சமம். அந்த வகையில் அனுதினமும் நம் வீட்டில் மகாலட்சுமி வருகையை பெற வேண்டும் என்றால், நாளை கார்த்திகை மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை, நம் வீட்டு நிலை வாசல் படியில் எந்த குறியீட்டை வரைய வேண்டும், எப்படி வரைய வேண்டும், வீட்டில் மகாலட்சுமி பூஜையை எப்படி எளிமையாக செய்வது, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த குறியீட்டை உங்கள் நிலைவாசல் படியில் வரைந்து இருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே நிலை வாசலில் கோலம் போட்டு, நிலை வாசல் படிக்கு மஞ்சள் குங்குமம் வைத்து, அலங்கரித்து அழகாக வைத்து விடுங்கள். பார்த்ததுமே உங்கள் நிலை வாசல் படி மகாலட்சுமி அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். குளித்து முடித்து சுத்தமான பிறகு, ஒரு சின்ன கிண்ணத்தில் வாசனை நிறைந்த குங்குமம் போட்டு, பன்னீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ஓரளவுக்கு திக்காக இருக்க வேண்டும். இந்த குங்குமத்தை தொட்டு நிலை வாசல் கதவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரையப் போகின்றோம்.

ஸ்வஸ்திக் சின்னம் நம் எல்லோரும் அறிந்தது தான். மகாலட்சுமியை மனதார நினைத்து சுவஸ்திக் சின்னத்தை நிலைவாசல் கதவில் வரைந்து, வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தில் நிலை வாசலில் விளக்கு ஏற்றுபவர்களாக நீங்கள் இருந்தால் நிலை வாசல் படியில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பிறகு பூஜை அறையில் வந்து விளக்கு ஏற்றி மகாலட்சுமிக்கு 2 டைமண்ட் கற்கண்டுகள் வைத்து பூஜையை எளிமையாக நிறைவு செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் காலை நேர வழிபாடு முடிந்து விட்டது. மாலை 6 மணிக்கு மகாலட்சுமிக்கு உங்கள் கையால் வெள்ளை நிற பிரசாதம் செய்து மகாலட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். கற்கண்டு சாதம், அக்கார வடிசல், இல்லையென்றால் பால் பாயாசம் செய்து வைப்பதும், சிறப்பு. இல்லையென்றால் உங்களுக்கு தெரிந்த நெய்வேத்தியம் இனிப்பு நெய்வேத்தியம் செய்து வைக்கலாம்.

மகாலட்சுமிக்கு வீட்டில் இருக்கும் விளக்கில் நெய் ஊற்றி தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி, மகாலட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி மந்திரங்களை சொல்லி பூஜை செய்யலாம். மந்திரம் படிக்க தெரியாது என்பவர்கள் ‘ஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி’ என்று சொல்லி மகாலட்சுமி மந்திரத்தை ஒலிக்க விட்டு மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு, தீப தூப ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் செய்து வைத்த பிரசாதத்தை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடலாம். இயலாதவர்கள் ஒருவருக்கேனும் நீங்கள் செய்த அந்த இனிப்பு பிரசாதத்தை தானமாக கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. நாளைய தினம் மேல் சொன்ன முறையில் எவர் வீட்டில் மகாலட்சுமி வழிபாடு செய்யப்படுகிறதோ, அவர்களுடைய வீட்டில் மகாலட்சுமியின் வருகை தடைபடாமல் இருக்கும் என்பதுதான் நம்பிக்கை.

Please follow and like us:

You May Also Like

More From Author