சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வட கொரியாவில் ஜூன் 8,9 ஆகிய நாட்களில், அரசு முறைப் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின் போது புதிய யுகத்திற்கு ஏற்ற சீன-வட கொரிய உறவை உயர்நிலைக்கு எடுத்துச் செல்வதற்குரிய கொள்கைகளை இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் அதியுயர்த் தலைவர்கள் வடிவமைத்து நெடுநோக்கு வழிகாட்டியுள்ளனர். அதோடு, சோஷலிசத்தின் எதிர்கால வளர்ச்சி எனும் நெடுநோக்கு கண்ணோட்டத்தில், யுகத்தின் முன்னேற்றப் போக்குகளுக்கு ஏற்ப இது தரப்புறவுகளின் உயர் நிலை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இரு தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக வட கொரியத் தொழிலாளர்க் கட்சி மத்தியக் கமிட்டியின் நாளேடான ரோதொங் சின்முன் வெளியிட்ட கட்டுரையில், ஷிச்சின்பிங்கின் நடப்புப் பயணமானது இருதரப்புறவில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், தொடர்ந்து ஆழமாகி வளர்ந்து வரும் வட கொரிய – சீன நட்புறவு வலிமையான உயிர் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது, நூறு ஆண்டுகாலத்தில் இல்லாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவும் வட கொரியாவும் சொந்த விஷயங்களை சிறப்பாக செய்வதில் கவனம் செலுத்தி செயல்பட்டு, சோஷலிச வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகின்றன.
சோஷலிய நட்பார்ந்த அண்டை நாடுகளான சீனாவும் வட கொரியாவும், பிராந்திய நீண்டகால உறுதிப்பாடு, உலகின் அமைதி மற்றும் நிதானத்தை நிலைநிறுத்துவதில் கூட்டாகப் பாடுபடும்.
இது குறித்து வடகொரியாவின் அதியுயர்த் தலைவர் கிம் ஜாங் உன் கூறுகையில், ஷிச்சின்பிங் வழங்கிய மனித குலத்தின் பொது சமூகக் கருத்தும் 4 உலக முன்மொழிவுகளும் உலகின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு உலக மக்களால் ஆதரவளித்து பாராட்டப்படும் என்றார்.
ஆய்வாளர்கள் பலர் கூறுகையில், சீனாவும் வட கொரியாவும் உயர் நிலை நெடுநோக்குக் கூட்டளியுறவை விரிவாக்குவது, இரு தரப்புறவுக்கும் புதிய யுகத்திற்கான சிறப்பான உள்ளடக்கத்தைக் கொண்டு வரும் என்றனர்.
