திமுக முப்பெரும் விழாவையொட்டி திமுக நாடாளுமன்ற பொதுக்குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கனிமொழி எம்பிக்கு பெரியார் விருது வழங்கப்படவுள்ளது. அண்ணா விருது பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீத்தாராமனுக்கும், கலைஞர் விருது அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சோ.மா. இராமச்சந்திரனுக்கும், பாவேந்தர் விருது குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் குளித்தலை சிவராமனுக்கும், பேராசிரியர் விருது சட்டப்பேரவை முன்னாள் கொரடா மருதூர் இராமலிங்கம் என்பவருக்கும், மு.க.ஸ்டாலின் விருது முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா. பழனிசாமிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.