நாளை முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்

Estimated read time 0 min read

மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதையொட்டி, அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகளை அந்த திடலில் அமைக்கப்பட்டு உள்ளன. அறுபடை வீடுகளின் மாதிரி அரங்குகளை காண நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும். ஆன்மிக மாநாட்டில் அரசியல் கலக்கும் நோக்கத்தில் செயல்படக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் மதுரை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு, முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் காப்பீடு, ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று ஆகியவற்றை காவல்துறையினரிடம் வழங்கி, அவர்கள் பதிவு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கலாம் எனவும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் காவல்துறை உரிய ஆணவங்களை பரிசோதித்து கொள்ளாலாம் என்றும் இதற்கு மனுதாரர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் முருக பக்தர்கள் மாநாட் டுக்கு வரும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

More From Author