பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் ஆண்டு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 11-வது கூட்டம் டெல்லி குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும், ஒன்றியப் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் கலந்து கொண்டு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் விஜய், தமிழகத்தின் வளர்ச்சி தேவைகள், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள், புதிய தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு உருவாக்கம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
