சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்களின் பார்வையிலுள்ள சின்ச்சியாங்

நாங்கள் நேரடியாகப் பார்த்த சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், மேலை நாட்டு ஊடகங்கள் காட்டியதுடன் வேறுபட்டதாக உள்ளது என்று சீனாவுக்கான டொமினிக் தூதர் மார்டின் ச்சால்ஸ் அண்மையில் தனது முதல் சின்ச்சியாங் பயணம் முடிவடைந்த பிறகு தெரிவித்தார். 5 நாட்களில், அவரும், இதர 24 நாடுகளின் தூதர்களும் கூட்டாக, சின்ச்சியாங்கின் காஷ், உரும்ச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டனர்.

சின்ச்சியாங்கிலுள்ள பருத்தி வயலில் நவீனமயமான பாசன வலை பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள், பருத்தி பறிக்கும் இயந்திரங்களின் மூலம், பருத்தி உற்பத்தியைப் பெருமளவில் உயர்த்துவதோடு, வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளனர் என்று ஈரான் தூதர் பாஹ்டியார் கவனித்திருந்தார்.

2020ம் ஆண்டின் இறுதியில், சின்ச்சியாங் பிரதேசத்தில் தீவிர வறுமை நிலை முற்றிலும் அழிக்கப்பட்டது. இவ்வாண்டு முற்பாதியில், சின்ச்சியாங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு, 85 ஆயிரத்து 420 கோடியே 80 இலட்சம் யுவானை எட்டி, கடந்த ஆண்டு இருந்ததை விட 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. இக்காலக்கட்டத்தில், 10.2 கோடி பயணிகள், சின்ச்சியாங் பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.

இவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டு இருந்ததை விட, 31.49 விழுக்காடு அதிகரித்தது. சுற்றுலா வருமானம் 9227 கோடியே 60 இலட்சம் யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட, 73.64 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author