அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் நேரில் வழங்கியிருந்தார்.
விதிகளுக்கு உட்பட்டு இந்த ராஜினாமா சமர்ப்பிக்கப்பட்டதை உறுதி செய்த பேரவைத் தலைவர், அதனை உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
இதன் மூலம் தமிழகத்தில் தற்பொழுது காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
