சீன-அமெரிக்க உறவில் அரசு சாரா பரிமாற்றங்கள் முன்னேறும்

95 வயதான அமெரிக்கரான பைடாவெய்க்கு சீனாவின் சிங்காய் மாநிலத்தின் சிநிங் நகரைச் சேர்ந்த குவாங் யூவன் மாவட்டம், மிகவும் இன்றியமையாத, சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.

1930ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகள் இம்மாவட்டத்தில் வாழ்ந்த அவர், 38 ஆண்டுகளுக்குப் பிந்தைய 1987ஆம் ஆண்டில் மீண்டும் இம்மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மருத்துவச் சிகிச்சை வசதிகளைக் கண்ட போது, இம்மாவட்டத்திற்கு பயனுள்ள விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று அவர் மன உறுதி எடுத்தார்.

அதற்குப் பிந்தைய 10க்கும் மேலான ஆண்டுகளில், அவர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் 20க்கும் மேலான முறையாகப் பயணம் மேற்கொண்டு, உள்ளூர் பிரதேசத்தின் மருத்துவமனைக்கு சுமார் 60 இலட்சம் யுவான் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை சாதனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இத்தகைய சாதனங்களின் மூலம் உள்ளூர் பிரதேசத்தில் மருத்துவச் சிகிச்சை நிலை பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தகைய இனிமையான கதைகள் சீனாவில் அதிகமாக இடம்பெறுகின்றன. 20 ஆண்டுகளுக்கு முன்பே, சீனாவின் லோயாங் நகரில் ஆசிரியராகப் பணியாற்றிய அமெரிக்க ஆசிரியர் ரொனால்ட் சாகோல்ஸ்கி, சீனாவின் பாலைவனமயமாதல் தடுப்புக்கு உதவியளித்தார். இத்தகைய அருமையான கதைகள், சீனா-அமெரிக்கா இடையே அரசு சாரா நட்பார்ந்த பரிமாற்றத்திற்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றன.

சீனாவும் அமெரிக்காவும் வரலாறு, பண்பாடு போன்ற துறைகளில் வேறுபட்டு காணப்பட்ட போதிலும், இரு நாட்டு மக்களுக்கிடையில் அன்பான நட்பார்ந்த நட்புறவு, இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு வலிமையான ஆற்றலையும் ஆதரவையும் கொண்டு வரும் என்பதை இத்தகைய கதைகள் வெளிகாட்டியுள்ளன.

இரு நாட்டு மக்களுக்கிடையில் பரிமாற்றம் தொடர்ந்து ஆழமாகி வருவதோடு, இரு நாட்டுறவு நீண்டகாலமாகவும் சீராகவும் வளர்ந்து வருவதற்கு அரசு சாரா பரிமாற்றம் ஒரு வலிமையான சமூக அடிப்படையாகவும் விளங்குகின்றது.

தற்போது, சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலின் கீழ், பெரிய நாடுகள் ஒன்றுடன் ஒன்று பழகுவதற்கான புதிய பாதையைத் தேடுவதற்குரிய சாத்தியக் கூறுகளை இரு தரப்பும் ஆராய்ந்து வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author