சீனச் சுங்கத் துறை தலைமைப் பணியத்தைச் சேர்ந்த குவாங்தோங் கிளை வாரியம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், குவாங்தொங்-ஹாங்காங்-மக்கௌ பெரிய விரிகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 9 பெருநிலப் பகுதி நகரங்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகை 9.46 இலட்சம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 26 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது, சீனத் தேசியளவிலான வெளிநாட்டு வர்த்தக அதிகரிப்பு விகிதத்தைக் காட்டிலும் 6 விழுக்காட்டு புள்ளிகள் அதிகமாகும். இந்த தொகை, சீனாவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதித் தொகையில் வகிக்கின்ற விகிதம், கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1 விழுக்காட்டு புள்ளி அதிகரித்து, 21.1 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதில் ஏற்றுமதித் தொகை 5.54 இலட்சம் கோடி யுவானாக இருந்து, 15.1 விழுக்காடும், இறக்குமதித் தொகை 3.92 இலட்சம் கோடி யுவானை எட்டி, 45.4 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
பெரிய விரிகுடா பிரதேசத்தைச் சேர்ந்த குவாங்டொங்கின் 9 நகரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு
You May Also Like
More From Author
சென்சோ-18 விண்கலம் விண்வெளி நிலையத் தொகுதியிலிருந்து பிரிந்தது
November 3, 2024
வெளிநாட்டவர்களின் பயணங்களை எளிதாக்கும் வசதியை மேம்படுத்தும் சீனா
October 23, 2024
முதல் 3 காலாண்டுகளில் சீனக் கடல் சார் பொருளாதார வளர்ச்சி
October 29, 2026
