அரசு சார் நிறுவனங்களில் கட்சி ஆக்கப்பணி குறித்து ஷிச்சின்பிங் முக்கிய உத்தரவு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் அரசு சார் தொழில்நிறுவனங்களில் கட்சியின் ஆக்கப்பணி குறித்து முக்கிய உத்தரவு ஒன்றை வழங்கினார். அதில் அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாடு முதல், கட்சி மத்திய கமிட்டியின் ஏற்பாடுகளை அரசு சார் நிறுவனங்கள் சீராகச் செயல்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆக்கப்பணி வலுப்படுத்தப்படுவதோடு, பல்வேறு பணிகளில் புதிய சாதனைகள் பெறப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். புதிய யுகத்தில் கட்சி ஆக்கப்பணி பற்றிய சிந்தனைகளைப் பன்முங்களிலும் நடைமுறைப்படுத்தி 20ஆவது மத்திய கமிட்டியின் 5ஆவது முழு அமர்வின் ஏற்பாடுகளை ஆழமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், அரசு சார் நிறுவனங்களுக்கான கட்சியின் பன்முக தலைமையை நிலைநிறுத்துவதோடு வலுப்படுத்த வேண்டும் என்றும், கட்சியின் முழுமையான மற்றும் கண்டிப்பான சுய ஆட்சியை விடா முயற்சியுடன் முன்னெடுத்து கட்சியின் உயர் தரமான ஆக்கப்பணி மூலம் நிறுவனங்களின் உயர் தர வளர்ச்சிக்கு வழிகாட்டவும் வேண்டும் என்றும் ஷிச்சின்பிங்  வலியுறுத்தியுள்ளார்.

அரசு சார் நிறுவனங்களில் கட்சி ஆக்கப்பணி பற்றிய கலந்துரையாடல் நவம்பர் 13ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் ஷிச்சின்பிங்கின் உத்தரவு தெரிவிக்கப்பட்டது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author