உத்தரபிரதேசம் : தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

Estimated read time 1 min read

உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நொய்டா செக்டார்-2 பகுதியில் உள்ள தனியார் நிறுவன கட்டடம் ஒன்றில் கரும்புகை வெளியேறிய நிலையில் திடீரெனத் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அலறியடித்து வெளியேறினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயை முற்றிலும் அணைத்த பின் ஆய்வு நடத்தி விபத்திற்கான காரணம் கண்டறியப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author