2025ஆம் ஆண்டு வெளிநாட்டு முதலீட்டை நிதானப்படுத்துவதற்குரிய செயல் திட்டத்தைச் சீனா பிப்ரவரி 19ஆம் நாள் வெளியிட்டுள்ளது.
இதில், தொலைத் தொடர்பு மற்றும் மருத்துவ சிகிச்சை துறையில் திறப்புக்கான முன்மாதிரி சோதனை இடங்களைத் தொடர்ந்து விரிவாக்குவது, கல்வி மற்றும் பண்பாட்டுத் துறையில் திறப்புத் திட்டத்தை ஆராய்ந்து வடிவமைப்பது, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவிலுள்ள கடனைப் பயன்படுத்தி பங்கு முதலீட்டை செய்வதற்கு ஒப்புதல் அளிப்பது முதலிய 20 நடவடிக்கைகள் அடங்கும்.
மேலும், முதியோருக்கான சேவை, பண்பாடு மற்றும் சுற்றுலா, விளையாட்டு, மருத்துவ சிகிச்சை, தொழில்முறை கல்வி, நிதி முதலிய சேவைத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து அதைப் பயன்படுத்துவதற்கு ஊக்கமளித்தல் போன்ற திட்டங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நவீன சேவைத் துறையில் வெளிநாட்டு முதலீடு செய்யப்படுவதற்கும், சீனாவின் மத்திய மேற்குப் பகுதி மற்றும் வட கிழக்குப் பகுதியில் வெளிநாட்டு முதலீடு செய்யப்படுவதற்கும் ஆதரவளித்தல் போன்றவைகளும் இத்திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.