திருப்பதி பக்தர்களுக்கு ஒரு குட் நியூஸ்: டிக்கெட் இருந்தால் லட்டு அன்லிமிடெட்  

திருப்பதிக்கு செல்பவர்கள் பெருமாளை சேவித்து விட்டு, தவறாமல் வாங்கி வருவது அந்த கோவிலின் பிரபலமான லட்டு பிரசாதம் தான்.
முன்னதாக ஒரு தரிசன டிக்கெட்டிற்கு இரண்டு இலவச லட்டுக்கள் என நடைமுறை இருந்தது.
அதன் பின்னர் வாங்கப்படும் எக்ஸ்ட்ரா லட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த நிலையில், பக்தர்களுக்காக ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேவஸ்தானம் போர்டு.
TTD அறிவிப்பின்படி, இனி கட்டுப்பாடுகள் இன்றி எத்தனை லட்டு வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி, சுவாமி தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஒரு இலவச லட்டுவும், கூடுதலாக ரூ.50 செலுத்தி எக்ஸ்ட்ரா லட்டுக்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
தரிசன டிக்கெட்டுகள் இல்லாதவர்கள் ஆதார் டிக்கெட்டை காண்பித்து 2 லட்டுக்கள் வரை பெற்றுக்கொள்ளலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author