சென்சோ-20 விண்வெளிப் பயணக் குழுவைச் சேர்ந்த 3 விண்வெளிவீரர்கள் தரையிலுள்ள பணியாளர்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் 26ஆம் நாள் இரவில் விண்கலத்துக்கு வெளியில் விண்வெளி நிலையத்துக்கான தொகுதிகளைப் பொருத்தும் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றினர். விண்வெளி நிலையத்துக்கு வெளியில் பணியை மேற்கொண்ட இரு விண்வெளிவீரர்கள் பாதுகாப்பாக ஆய்வு அறைக்குத் திரும்பியுள்ளனர்.
தற்போது, பல்வகை விண்வெளி அறிவியல் ஆய்வுகளில் சென்சோ-20 விண்வெளிவீர்ர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர், விண்வெளி உயிரி அறிவியல், நுண் ஈர்ப்புவிசை அடிப்படை இயல்பியல், விண்வெளி பொருள் அறிவியல், விண்வெளி மருத்துவம், விண்வெளி புதிய தொழில் நுட்பம் முதலியவை பற்றி அவர்கள் விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.