சீன அரச் தலைவர் ஷிச்சின்பிங் 27ஆம் நாள் முற்பகல், பெய்ஜிங் மாநகரில், செனகல் தலைமையமைச்சர் சொன்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீனாவும் செனகலும் தற்சார்ப்பு வளர்ச்சிப் பாதையில் நடைபோடுவதில் ஒன்றுக்கு ஒன்று உறுதியாக ஆதரவளிக்க வேண்டும். கட்சிகளுக்கிடையில் தொடர்பு, நாட்டின் மேலாண்மை ஆகியவை குறித்து ஒன்றை ஒன்று கற்றுக்கொண்டு, அரசியல் துறையில் பரஸ்பர நம்பிக்கையை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
செனகலுடன் இணைந்து, நெருக்கமாக ஒத்துழைத்து, இரு நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் மேலதிகமான திட்டப்பணிகளை நடைமுறைப்படுத்த சீனா விரும்புகின்றது என்றார்.