2025ஆம் ஆண்டு, அமெரிக்காவின் குவால்காம் நிறுவனம் சீனச் சந்தையில் நுழைந்துள்ள 30ஆவது ஆண்டாகும். கடந்த சில ஆண்டுகளில், தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தை பின்தொடர்பவரிலிருந்து, இத்தொழில் நுட்பத்தை வழிநடத்தும் நாடாக சீனா மாறியுள்ளது என்று சீனாவுக்கு வருகை புரிந்து, 16ஆவது கோடைகால தாவோஸ் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்நிறுவனத்தைச் சேர்ந்த சீன தலைமை அலுவலர் மெங் பூ தனது சொந்த கருத்துக்களை தெரிவித்தார். எதிர்காலம் வரும் பொருட்காட்சி அரங்கு, பசுமையான, கரி குறைந்த கருப்பொருட்கள் குறித்து, தற்போதைய உலகப் பொருளாதாரத்தின் சூடான அம்சங்கள் இக்கூட்டத்தில் அதிகமாக காணப்பட்டுள்ளன.
கடந்த பல ஆண்டுகளில், கோடைகால தாவோஸ் மன்றம், உலகப் பொருளாதார மன்றத்துக்கு உயிர் ஆற்றலைக் கொண்டு வருகிறது. 24ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை, சீனாவின் தியன்ச்சின் மாநகரில் நடைபெற இம்மன்றக் கூட்டம், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளவில் சுமார் 90க்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 1800 விருந்தினர்கள் இதில் கலந்துகொண்டு, முன்கண்டிராத அளவை எட்டியுள்ளனர். தவிரவும், சுமார் 200 கிளை கருத்தரங்குகளும் இதில் இடம்பெற்றன. வெளிநாட்டுத் திறப்பு மற்றும் ஒத்துழைப்பு எனும் குரல் இதன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. உலகளவில் அதிகமான சர்வதேச தொழில் மற்றும் வணிக துறையினர்கள் சீனாவில் முதலீடு செய்து, சீனாவுடனான வர்த்தக ஒத்துழைப்பை ஆழமாக்க விரும்புகின்றனர் என்று உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமை இயக்குநர் பிரென்த் தெரிவித்தார்.