சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 27ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் கோடைக்கால டாவோஸ் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ள ஈக்வடோர் அரசுத் தலைவர் நொவாயாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு இரு நாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டுறவு சீராக வளர்ந்து வருகின்றது என்று தெரிவித்தார்.
நொவாயா கூறுகையில், சீனா உலகக் கவனத்தை ஈர்க்கும் மற்றும் வியந்து பாராட்டத்தக்க வளர்ச்சிச் சாதனைகளைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பின், சீன மக்கள் குடியரசும் ஈக்வடோர் குடியரசும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றுவதற்கான ஒத்துழைப்புத் திட்டம் இரு அரசுத் தலைவர்களின் முன்னிலையே கையொப்பமிடப்பட்டது.