இந்தியாவுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் நோக்கமில்லை – வங்கதேசம்

Estimated read time 0 min read

இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்தச் சந்திப்பையும் நடத்தவில்லை எனச் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தைக் குறித்து வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஜூன் 19ம் தேதி சீனாவின் குன்மிங்கில் சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் பிரதிநிதிகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த 3 அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு முரண்பாடு இருந்து வரும் சூழலில், இந்தச் சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவுக்கு எதிராகக் கூட்டணி அமைக்கும் நோக்கத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என உறுதியளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author