ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான மலைப்பகுதிகள் கொண்ட இந்த நிலப்பரப்பில், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 முதல் 3 பேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திங்களன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் தங்குவதற்கு பயன்படுத்திய ஒரு பெரிய ரகசிய மறைவிடம் கண்டறியப்பட்டது.
அங்கிருந்து குளிர்காலத்திற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த அதிக அளவிலான ரேஷன் பொருட்கள், நெய், சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்
