வசூல் மழை; டாப் கியரில் ஜூனியர் என்டிஆரின் தேவாரா படத்தின் கலெக்சன்  

ஜூனியர் என்டிஆரின் தேவாரா பார்ட் 1 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து சாதனை படைத்து வருகிறது.
இந்தியாவில் படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டிய நிலையில், உலகம் முழுவதும் ரூ.200 கோடியைத் தாண்டியுள்ளது.
தெலுங்கு சினிமா இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் சைஃப் அலிகான் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், திரைப்படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இது பான் இந்தியா திரைப்படமாக தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author