கேரள முன்னாள் முதல்வரும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் திங்கட்கிழமை காலமானார்.
அவருக்கு வயது 101.
நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக, அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.
VS என்று அழைக்கப்படும் வேலிக்கக்காத்து சங்கரன் அச்சுதானந்தன், 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகப் பணியாற்றினார்.
மேலும் பல தசாப்தங்களாக CPM-இன் முக்கிய தலைவராக இருந்தார்.
கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய அச்சுதானந்தன், 15 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார்.
அவர் 1985 முதல் 2009 வரை சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தார், அதன்பிறகு அவர் கட்சியின் மத்திய குழுவிற்கு மாற்றப்பட்டார்.
அன்னாரது மறைவிற்கு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரள முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்
